யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி அறிவியல் நகர் வளாக A9 வீதி சந்தியில் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று செவ்வாய் (13) மதியம் வழங்கப்பட்டது.
இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிர்துறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
முள்ளிவாய்க்கால் அவலங்களை இளம் சந்ததிக்கு உணர்த்தும் விதமாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தொழில்நுட்ப பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொதுமக்களின் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல் இடம்பெற்றது.


