யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலுள்ள (University of Jaffna) 15 விரிவுரையாளர்களை விமர்சித்து மற்ற விரிவுரையாளர்களால் சுவரொட்டியொன்று ஒட்டப்பட்டுள்ளமையானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சுவரொட்டிகள் இன்றையதினம் (18) பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.
நேற்றையதினம் யாழ் பல்கலையிலுள்ள 15 விரிவுரையாளர்கள் ஒன்றிணைந்து 2024 ஜனாதிபதி தேர்தலும், சிறுபான்மையின மக்களும் என்ற தலைப்பில் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளனர்.
சர்ச்சைக்குரிய சுவரொட்டி
இந்நிலையில், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உடன்பாடு இன்றி, தமிழர் உரிமைகளுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட 15 விரிவுரையாளர்களின் செயலை விமர்சித்து பல்கலைக்கழக வளாகத்தில் விரிவுரையாளர்களினால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, எங்களுடைய போராட்டதின் மிகப்பெரிய ஆயுதமாக வாக்கு என்ற புள்ளடியை பயன்படுத்தி எதிர்வரும் 21ஆம் திகதி தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு வாக்களியுங்கள் என யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் (University of Jaffna) வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை (P. Ariyanethiran) ஆதரித்து நேற்று (17) யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.