யாழ்ப்பாண நகர்பகுதியில் உள்ள பெரிய கடை வீதி கடை கட்டட தொகுதியில், நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இரண்டு கடைகள் தீயில் எரிந்துள்ளன.
இதன்போது கடையில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீப்பரவலை கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்தனர்.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
