யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் 20 வயது இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தெல்லிப்பளை பகுதியில் உள்ள வீடொன்றில் ஆட்களற்ற நேரம் பார்த்து வீட்டினை உடைத்து, அங்கிருந்த பொருட்கள் திருடப்பட்டிருந்தன.
இது தொடர்பில் உரிமையாளரால் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கட்டுவன் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனை கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் வீட்டில் திருடப்பட்ட தொலைக்காட்சி, நீர் இறைக்கும் இயந்திரம் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து இளைஞனிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.