யாழ்ப்பாணம், மண்டைதீவு கடலில் மர்மான மரப் பெட்டியொன்று மிதந்துவந்து பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்தேகத்திற்கு இடமான பெட்டி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 5 மணியளவில் மீட்கப்பட்ட குறித்த மரத்தாலான பெட்டியில் ஆயுதங்கள் இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கடலில் மிதந்து வந்த குறித்த பெட்டி தொடர்பாக மீனவர்கள் சிலர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இப் பெட்டியானது மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பெட்டி தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.