கொவிட் வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வட மாகாணத்தின் பிரதான நகரமான யாழ்ப்பாணத்தில் வாழும் மக்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மிகவும் சரியான முறையில் பின்பற்றுவதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாள் முதல் இதுவரையில் யாழ்ப்பாண நகரம் வெறிச்சோடி காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிரதான வீதிகளில் மாடுகள் மற்றும் நாய்களை மாத்திரமே காண முடிவதாகவும் மக்கள் பொறுப்புகளை உணர்ந்து செயற்படுவதாகவும் யாழ்ப்பாண பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறாயினும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறும் நபர்களை கைது செய்வதற்காக பல இடங்களில் வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.