இலங்கை – இந்திய நட்புறவின் சின்னமாக இந்திய அரசின் அரசின் 1.6 பில்லியன் நிதியுதவில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இன்று எளிமையான முறையில் திறந்து வைக்கப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் நண்பகல் 01.00 மணியளவில் காணொளி முறையில் எளிமையான முறையில் திறந்து வைக்கப்பட்டது.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, கல்வியமைச்சர் டினேஸ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இத் திறப்பு விழாவில் யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் வடக்குமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், யாழ் மாநகர முதல்வர் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், மதகுருமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பல கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன.
யாழ்ப்பாண பண்பாட்டு மையம் வெகுவிமரிசையாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்ட பின்னரே பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]