ஈழத்தமிழர்களின் கலாசார நகரான யாழ்ப்பாணம், பிரித்தானியாவின் லண்டன் பெருநகர பிராந்தியத்தில் உள்ள கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் நகரத்துடன் இணை நகராக இருப்பதை வெளிப்படுத்தும் அறிவிப்பு பலகை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு இன்று முற்பகல் பதினொரு மணியளவில் லண்டனில் இடம்பெற்றுள்ளது.
லண்டன் நகரத்தில் இந்தமாதத்தில் தமிழ் மரபுரிமை திங்கள் கடைப்பிடிக்கப்பட்டு பல நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில் அந்த நிகழ்வுகளில் ஒரு முக்கிய நிகழ்வாக இது இடம்பெற்றுள்ளது.
இந்த பலகை தாராளவாத ஜனநாயக கட்சியான லிப்டெமின் தலைவர் எட்டேவியினால் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது நாதஸ்வர வாத்தியங்கள், மற்றும் பறை மேளங்களும் இசைக்கப்பட்டன.
அத்துடன் பெயர் பலகை திறந்து வைக்கப்பட்ட போது சிவப்பு, மஞ்சள் பலுான்கள் பறக்க விடப்பட்டிருந்தன. இந் நிகழ்வில் பிரித்தானிய அரசியல் பிரமுகர்களும் தமிழ்மக்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இரண்டு நகரங்களின் இணைவு திட்டத்தின் அடிப்படையில் கடந்த 20016 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண நகருடன் கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் நகரம் இணைந்துகொண்டிருந்தது. இதற்குரிய ஒப்பந்தம் அப்போது வடமாகாண முதலமைச்சராக இருந்த சி.வி.விக்கினேஸ்வரன் 2016 ஆண்டில் லண்டனுக்கு சென்றபோது ஒப்பமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]