யாழ்ப்பாணத்தில் இயங்கும் 335 கற்பக சங்கப் பிரிவின் ஊடாகவும் தேங்காய் மட்டைகளை சங கங்களின் ஊடாக கொள்வனவு செய்ய நடவடிக்கை இடம்பெறுவதாக தெங்கு அபிவிருத்தி வடமாகாண இணைப்பாளர் வைகுந்தன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கிளிநொச்சிப் பகுதியில் இனிவரும் காலங்களில் தேங்கும் தேங்காய் மட்டைகளையும் சந்தைப்படுத்தி அதன் மூலமும் வருமானத்தை ஈட்டக்கூடியதான ஓர் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது இயக்கச்சிப் பகுதியில் சக்தி அக்றோ நிறுவனத்தின் உள்ளூர் உற்பத்தி நிறுவனம் குறித்த மட்டைகளைக் கொள்வனவு செய்ய முன்வந்துள்ளது.
இதனால் நாம் ஓர் ஏற்பாட்டினை மேற்கொண்டுள்ளோம் அதாவது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் யாழில் உள்ள 335 கற்பக சங கங்கத்திடம் தம்மிடம் உள்ள மட்டைகளைச் சந்தைப்படுத்த முடியும். அவ்வாறு சங்கங்கள் தாம் கொள்வனவு செய்யும் மட்டைகளை மொத்தமாக நிறுவனத்திற்கு சந்தைப்படுத்த முடியும். அவ்வாறு சங்கங்கள் கொள்வனவு செய்யும் மட்டைகள் சங்கம் குறித்த தனியார் நிறுவனத்திற்கு சந்தப்படுத்தும் .
இதற்கான முதலாவது ஆரம்ப வைபம் இன்று ( நேற்று) சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச செயலாளர் தலமையில் இடம்பெற்றது. இதில் சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள 60 கற்பக சங்கங களின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டு இவற்றிற்கான ஏற்பாடுகள் பூரத்தி செய்யப்பட்டுள்ளது. என்றார். –