இந்தியாவின் சிதம்பர ஆலயத்துக்கு செல்வதற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து இதுவரைக்கும் 140 பேர் பதிவு செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பர ஆலயத்துக்குச் கப்பல் மூலம் செல்ல விரும்புவோர் பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்று நேற்றுமுன்தினம் தெரிவிக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலத்தின் இந்து கலாசார திணைக்கள அதிகாரிகளிடம் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
யாழ்ப்பாணத்தில் இருந்து செல்வோர் காங்கேசன் துறைமுகத்தில் இருந்து சென்னைக்குச் சென்று பின்னர் சென்னையில் இருந்து பேருந்தின் மூலம் சிதம்பரம் அழைத்துச் செல்லப்படுவர். பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் சிதம்பரம் செல்வதற்கான காலம், பயணத்துக்கான தொகை என்பன தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.