பொதுமக்களைக் கல் எறிந்து தாக்குதல் நடத்தும் நபரின் வீட்டிலிருந்து 6 மின்மோட்டர்கள் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் வசித்துவரும் சுமார் 60 வயதுடைய குறித்த நபர் தனது வீட்டுக்கு அருகாக யாராவது சென்றால் அவர்களுக்கு கல் வீசித் தாக்குதல் நடத்துவார்.
இது புறமிருக்க அந்தப் பகுதி உள்ளிட்ட பல இடங்களிலும் மின்மோட்டர்கள் உள்ளிட்ட இலத்திரனியல் பொருள்கள் திருடப்பட்டுள்ளன.
குறித்த நபர் தொடர்பில் சந்தேகம் கொண்டதால் அது தொடர்பில் பொலிஸாருக்கு முறையிட்டனர். அதன்படி குறித்த நபரின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் மேற்குறித்த பொருள்களை மீட்டுள்ளனர்.
இதனையடுத்துக் கடந்த வியாழக்கிழமை குறித்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.