எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்த லில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.குறித்த விபரங்களை யாழ்.மாவட்ட உள்ளூராட்சி அதிகார சபையின் தெரிவத்தாட்சி அலுவலர் த.அகிலன் யாழ்.மாநகர சபை ஆணையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட பிரதேச சபையின் செயலாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.யாழ். மாநகர சபை, மூன்று நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் உள்ளிட்ட 17 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுபவர்களின் பெயர் மற்றும் அது குறித்த நியமனங்களின் விபரங்களே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அனுப்பி வைக்கப்பட்ட பெயர் குறித்த கட்சி ரீதியான நியமன விபரங்களை பொதுமக்கள் உள்ளூராட்சி சபைகளின் விளம்பர பலகைகளில் பார்வையிட முடியும்.இதில் முதலாவது நியமன பத்திரத்தில் கட்சிகளின் பெயர், வட்டார இலக்கம், வேட்பாளர்களின் பெயர், விபரங்களும், மேலதிக நியமன பத்திரத்திலும் வேட்பாளர்களின் பெயர், விபரம் என்பன அனுப்பி வைக்கப்பட்டுள்ளன