ஜோஸப் ஸ்டாலின் கொழும்பு, மோதரை, துறைமுக தொழிலாளர் தலைவரும் இலங்கை கம்யூனிஷ்ட் கட்சி அல்லது சீன அணியின் தலைவரான தோழர் பெனடிக் அவர்களின் மகனாவார்.
மோதரை டிலாஸால் வித்தியாலயத்தில் கல்வி பயின்று, ஹாபிட்டிகம கல்விக் கல்லூரியில் ஆரம்பப் பிரிவுக்கான ஆசிரியராக பயிற்றப்பட்டு, முதல் நியமனம் பெற்ற தோழர் ஜோஸப் அனுராதபுர மாவட்டத்தின் தந்திரிமலை வன்னிஹெலம்பேவ படசாலையில் மிக நீண்டகாலமாக பணியாற்றினார். அந்த காலகட்டமானது யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் என்பதால் தந்திரிமலை பிரதேசமானது போக்குவரத்து வசதிகளின்றிய பின்தங்கிய காலமாகும்.
நீண்டகாலமாக சேவையாற்றிய பின் அங்கிருந்து கொழும்புக்கு மாற்றம் பெறாது, கண்டி தெல்தெனிய பிரதேசத்திலுள்ள மற்றுமொரு கஷ்டப் பிரதேசத்திற்காகும். பின் அங்கிருந்து கொழும்பிற்கு மாற்றலாகி வந்த அவர் புளுமென்டல் பிரதேசத்தில் வாழும் வீதிச் சிறார்கள் செறிவாக வாழும் பாடசாலையொன்றில் கற்பித்துக் கொண்டிருந்த போது பத்திரிகைக்கு கட்டுரை ஒன்றை எழுதிக்கொள்ள அந்தப் பாடசாலைக்குச் சென்றேன்.
ஜோசா வன்னிப் பகுதியில் இருந்த காலத்தில் அதற்கு கொஞ்சம் இந்தப் பக்கம் புளியங்குளம் அலையாப்பற்று மகா வித்தியாலயத்தில் பணிபுரிந்தேன். ஜோஸா பாடசாலையில் மிக நன்றாகக் கற்பிக்கின்ற, அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்ற, அதிகமான வெளிக்கள வேலைகள் செய்கின்ற ஆசிரியர். பின்னர் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தேவை நிமித்தம் முழுநேர தொழிற்சங்க செயற்பாட்டுக்கு வந்தவர்.
ஜோஸப் தொழிற்சங்கத் தலைவர் என்ற வகையில் கடந்த காலங்களில் ஆசிரிய சங்கத் தலைவர்கள் பின்பற்றிய கொள்கையொன்றை மிகவும் தீவிரமாக பின்பற்றியவர். அதுதான் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் அதிபர் பதவி போன்ற வேறு பதவி உயர்வுகளை வேறு தரப்படுத்தல்களை பெற்றுக் கொள்ளாமை.
1980 களில் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டு அநீதிக்குட்பட்ட ஆசிரியர் சங்கத் தலைவர்கள் 2005 காலப்பகுதியில் ஆசிரியர் சங்கங்களென்ற வகையில் ஆஜராகி, அரசியல் பழிவாங்கல் தொடர்பில் நடவடிக்கை எடுத்து சலுகை பெற்றுக் கொண்டமையை ஜோஸப் மிக வன்மையாகக் கண்டித்தார். அதுமட்டுமல்ல இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மத்திய குழுவின் நியமனப் பிரேரனைகளுக்குப் புறம்பாக போட்டியிட்டார். அந்த வாக்கெடுப்பில் தோல்வியுமுற்றார்.
தோழர் பேர்டி வீரக்கோனின் சகோதரர் வெற்றியீட்டி தலைவர் பதவிக்குத் தெரிவானார். அவர் பிற்காலத்தில் கல்விப் பணிப்பாளராக ஓய்வுபெற்றார். எவ்வாறாயினும் பின்பு ஜோஸப் இந்தக் கொள்கையை மாற்றியமைத்தார். அவருடன் இருந்தவர்கள் எல்லோருமே பதவி உயர்வு பெற்றுக் கொண்டார்கள். ஆனால் ஜோஸா என்றுமே ஆசிரியராக இருந்தாரே தவிர ஒருபோது பதவி உயர்விற்கு முயற்சிக்கவில்லை.
அவர் இப்போது வாரத்தில் ஏழு நாட்களும் ஆசிரியர் சங்க அலுவலகத்தில் அல்லது அதுசார் பொது வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். முழு நேர தொழிற்சங்க வாதியாக மாறிய பின் ஒருபோதும் தனிப்பட்ட தேவைகள் நிமித்தம் தனது நேரத்தை ஒதுக்கிக்கொள்ளாதவர்.
ஜோஸாவிற்கு ஆசிரியர் தொழிற்சங்கம் தவிர்ந்த தனிப்பட்ட வாழ்க்கையின் தேவைகள் அதிகம் இருக்கலாம். அவர் திருமணமாகாதவர். நகர்புற வாசிகளான அவரது குடும்ப உறுப்பினர்கள் பொது வாழ்க்கையில் ஈடுபடுவோர். அவர்கள் ஏனையோரைப் போன்றே தொழில் செய்தவாறு சுயாதீனமாக வாழ்வோர். காணி, வீடு, வாகன வசதிகளைப் பெற்றுக் கொண்டு வாழ்வில் முன்னேறி சமூக அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள முயற்சிக்காதவர்.
எனக்குக் தெரிந்தவரை அனுராதபுர பகுதியில் இருக்கும்போது யாரோ கொடுத்த மோசமான நிலையில் இருந்த ஒரு சைக்கிளைத் தவிர வேறொன்றும் இருக்கவில்லை. தனக்குக் கிடைக்கும் ஊதியத்தில் மட்டுமே வாழ்க்கையை ஓட்டும் தொழிலாளர் வர்க்கத்தைச் சார்ந்தவர். அது ஜோஸாவின் தேர்வு.
குறிப்பு:
அஜீத் பெரகும்
(தமிழில் மார்க்ஸ் பிரபா)