யார் இந்த அஸ்வின்? சில சுவாரசிய தகவல்கள்
உலக கிரிக்கெட் அரங்கையே தங்களுடைய சுழற்பந்து வீச்சால் மட்டையாளர்களை கதி கலங்க வைத்தவர்கள் இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் மற்றும் அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்ன்.
தற்போது இவர்கள் இருவரையும் மிஞ்சும் அளவிற்கு எதிரணி மட்டையாளர்களை மிரட்டி வருபவர் இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின்.
அண்மையில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் அஸ்வின்.
அவரைப் பற்றி தெரியாத சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்ப்போம்.
- அஸ்வினுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு கால்பந்து தானாம். பள்ளிக் காலங்களில் இவருடைய நண்பர்கள் உயரமாக இருக்கிற காரணத்தினால் கால்பந்து அணியில் சேர்த்து விளையாடினார்களாம்.
- அஸ்வின் கடந்த நவம்பர் 13 ஆம் திகதி 2011 ஆம் ஆண்டு பிரீத்தி நாராயணன் என்ற பெண்ணை திருமணம் செய்தார். ஆனால் பிரீத்தி நாராயணன் அஸ்வினுக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்தவராம். அஸ்வினுக்கு அவரிடம் மிகவும் பிடித்ததே எளிமை தானாம்.
- ஒரு இன்னிங்ஸில்(டெஸ்ட்) சதமும் அடித்து, அதன் பின்னர் அதே இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.
- கிரிக்கெட் வீரர்களுக்கு அர்ஜுனா விருது கிடைப்பது மிகப்பெரிய கெளரவம். இது அஸ்வினுக்கு கிடைத்துள்ளது. அது மட்டுமில்லாமல் அர்ஜுனா விருது பெறும் 47 வது கிரிக்கெட் வீரர் அஸ்வின்.
- இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 50 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலிம் அஸ்வினுக்கே முதலிடம். இவர் 9 டெஸ்ட் போட்டிகளில் இச்சாதனையை நிகழ்த்தினார். இவருக்கு அடுத்த படியாக தற்போதைய பயிற்சியாளரான அனில் கும்ளே 10 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டிகளிலே 9 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் அஸ்வின். இவருக்கு அடுத்தபடியாக நரேந்திர ஹிர்வானி(16) என்பவர் உள்ளார்.
- டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலிலும் அஸ்வினுக்கே முதலிடம். இவர் இதை 18 டெஸ்ட் போட்டிகளில் நிகழ்த்தினார். இவருக்கு அடுத்த படியாக பிரசன்னா 100 விக்கெட்டுகளை 20 டெஸ்ட் போட்டிகளில் நிகழ்த்தினார்.
- இதன் காரணமாக டெஸ்ட் தொடர்களில் 800 விக்கெட் வீழ்த்திய இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் சாதனையை எட்டுவதற்கு அஸ்வினுக்கு வாய்ப்புகள் உண்டு என கிரிக்கெட் பிரபலங்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்