ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பின் எந்த ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
ஐ.நா.உயர் ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அறிக்கைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்பு | Virakesari.lk
புதிய ஜனாதிபதி பதவிக்காக தற்போதைய பதில் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க , ஜே .வி.பி. தலைவரும் எதிர்க்கட்சி எம்.பியுமான அநுர குமார திஸாநாயக்க, ஆளும் கட்சியான பொதுஜன பெரமுன வின் எம்.பி யான டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டன
இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில எம்.பிக்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள நிலையில் இன்னொரு தரப்பினர் டலஸ் அழகப்பெருமாவை ஆதரிக்க வேண்டுமெனவும் கூறியுள்ளனர்.
அதேவேளை தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கடசித்தலைவர்களில் ஒருவர் புதிய ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பை புறக்கணிக்க வேண்டும் அல்லது நடு நிலைமை வகிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ள போதும் அதில் எந்த இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று மாலை கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனின் வீட்டில் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட்டம் நடத்தப்பட்டு இதுதொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இருந்தபோதும் இறுதி நேரம் வரை கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் எந்த தீர்மானத்தையும் உத்தியோக பூர்வமாக பெற்றுக்கொள்ள முடியாமல் போனது
இருந்தபோதும் ஜனாதிபதி தேர்தலின் போது இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வாக்களிக்குமாக இருந்தால் வாக்குகள் சிதறும் நிலைமை உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் மூலம் தெரியவருகின்றன.