மக்கள் விடுதலை முண்ணனியில் போட்டியிடும் வேட்பாளரொருவரின்
தேர்தல் காரியாலயம் இனந்தெரியாதோரால் தீ வைத்து சேதமாக்கப்பட்டது.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை, கந்தளாய், பேராறு பிரதேசத்தில் உள்ள தேர்தல் காரியாலயமே இவ்வாறு சேதமாக்கப்பட்டது.
இதே பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ஒருவரின் தேர்தல் காரியாலயமும் அண்மையில் சேதமாக்கப்பட்டது.
இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகளை பொலிஸார்
முன்னெடுத்து வருகின்றனா்.