பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊரான, வாத் நகர் அடங்கிய, ஊஞ்சா சட்டசபைத் தொகுதியில், பா.ஜ.க அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது.
குஜராத்தில், பிரதமர் மோடியின் சொந்த ஊரான, வாத் நகரின் பகுதிகள், மெஹ்சானா மாவட்டத்தில் கேராலு, ஊஞ்சா ஆகிய இரு தொகுதிகளில் அடங்கிஉள்ளன. இவற்றில், கேராலு தொகுதியில், பா.ஜ.க வேட்பாளர், சங்கர்ஜி தாபி, 49 ஆயிரம் ஓட்டுகள் பெற்று வெற்றி அடைந்தார்.
அதேசமயம், ஊஞ்சா தொகுதியில், காங்., வேட்பாளர், துவாரகதாஸ் படேல், 74 ஆயிரம் ஓட்டுகள் பெற்று வெற்றி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட, பா.ஜ.க வேட்பாளர், லாலுதாஸ் படேல், தோல்வியை தழுவினார். இத்தொகுதியில், 1995 முதல், தொடர் வெற்றிகளை பெற்றவர், லாலுதாஸ் படேல். ஊஞ்சா தொகுதியில், விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், பா.ஜ.கவுக்கு எதிராக, அவர்கள் ஓட்டளித்ததாகக் கூறப்படுகிறது.