முழு நாட்டையும் ஒரு குடும்பம் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. மோசடி செய்த மக்கள் பணத்தை ராஜபக்ஷர்கள் நாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டும்.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவியில் இருக்கும வரை சர்வதேசம் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்காது.
ஜனாதிபதி உட்பட ராஜபக்ஷர்கள் அரசியலில் இருந்து முழுமையாக நீங்கினால் மாத்திரமே பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என 43 ஆவது படையணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
எரிபொருள் விநியோக கட்டமைப்பின் பாதிப்பு முழு நாட்டையும் முடக்கும் அளவிற்கு பாரதூரமான நிலைக்கு சென்றுள்ளது. பதிவு செய்யப்பட்ட தரப்பினரிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதை விடுத்து அரசாங்கம் பிற தரப்பினிடமிருந்து தரமற்ற எரிபொருளை கொள்வனவு செய்ய முயற்சிக்கிறது.
எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு விரைவில் எட்டப்படும 6 கப்பல் வரும்,4 கப்பல் வரும் என வலுசக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போது ஒரு கப்பல கூட வரவில்லை.முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வலுசக்தி அமைச்சருடன் ஒன்றினைந்து ஊடக சந்திப்பை நடத்தும் போது எரிபொருள் விநியோக கட்டமைப்பு மேலும் பாதிக்கப்படும் என ஊகித்தேன்.
முழு நாட்டையும் ஒரு குடும்பம் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. நாட்டை மிக மோசமான நிலைக்கு நெருக்கடிக்குள்ளாக்கியவர்கள் இன்றும் சுதந்திரமாக உள்ளார்கள்.ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை பதவியில் வைத்துக்கொண்டு எப்பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு சர்வதேசம் அங்கிகாரம் வழங்காது.ராஜபக்ஷர்களுக்கு மக்களாணை கிடையாது.ராஜபக்ஷர்கள் அரசியலில் இருந்து முழுமையாக நீக்கினால் மாத்திரமே பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபித்து வெகுவிரைவில் பொதுத்தேர்தலை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண மக்களுக்கு வாய்ப்பு வழங்குவது அவசியம் என்பதை பலமுறை வலியுறுத்தியுள்ளோம்.தேர்தலை நடத்துவதை புறக்கணித்து குறுகிய வழியில் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் முயற்சிக்கிறது என்றார்.