மோசடியான மருத்துவர்களை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்காக பொலிஸ் தலைமையகத்தின் உதவியை பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியாக போலியான வர்த்தகர்கள் 30 ஆயிரம் பேர் இருப்பதாக பல்வேறு பிரிவுகளின் ஊடாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் தனிப்பட்ட மருத்துவ துறையில் ஈடுபடும் மருத்துவர்கள் 15000 பேர் பணியாற்றுகின்றனர்.
அதேவேளை போலி மருத்துவர்களை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்காக தனிப்பட்ட மருத்துவசேவை ஒழுக்காற்று சபையில் பதிவு செய்ய வேண்டும் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
அதன்படி, அந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக மாற்றுவதற்காக ஒத்துழைப்பு வழங்குமாறு தனிப்பட்ட சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.