மோகன்லாலின் மகன் பிரணவிற்கு நாளை மிக முக்கியமான நாள். ஆம்.. அவர் முதன்முதலில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள ‘ஆதி’ என்கிற படம் நாளை (ஜன-26) வெளியாகிறது. ‘த்ரிஷ்யம்’, ‘பாபநாசம்’ படங்களை இயக்கிய ஜீத்து ஜோசப் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் என்பதால், இந்தப்படம் நிச்சயமாக பிரணவிற்கு திரையுலகில் வெற்றிப்பாதை அமைத்துக் கொடுக்கும் என்றே பலரும் ஆருடம் சொல்கிறார்கள்.
இந்தநிலையில் பிரணவின் நண்பரும், நடிகருமான துல்கர் சல்மான் பிரணவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் குறிப்பிட்டுள்ள பதிவில், “டியர் அப்பு.. நீ எப்போதுமே எனக்கு ஒரு தம்பி போலத்தான்.. உன்னுடன் குழந்தை பருவத்தில் பழகிய நாட்கள் இன்னும் என் மனதில் அப்படியே தங்கி இருக்கின்றன. உன் வெற்றியை உன் பெற்றோரும் சகோதரியும் எப்படி எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை என்னால் உணர முடியும். ஆனால் அவர்களுக்கு அந்த கவலை தேவையில்லை.. ஏனென்றால் பிறக்கும்போதே சூப்பர் ஸ்டார் ஆவதற்காக பிறந்தவன் நீ” என தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார் துல்கர் சல்மான்.