மோகன்லாலை வைத்து ‘மரைக்கார் : அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ என்கிற படத்தை இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார் இயக்குனர் பிரியதர்ஷன். கேரளாவில் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘குஞ்சாலி மரைக்கார்’ என்கிற கடற்படை தலைவன் கேரக்டரில் தான் மோகன்லால் நடிக்கவுள்ளார்.
இந்தப்படத்தில் மோகன்லாலுடன் இன்னும் சில மற்ற மொழி பிரபலங்களும் நடிப்பார்கள் என சொல்லப்பட்டு வந்தது. அது தற்போது உறுதியாகி உள்ளது. ஆம்.. இந்தப்படத்தில் தெலுங்கிலிருந்து நாகார்ஜுனா, பாலிவுட்டில் இருந்து சுனில் ஷெட்டி, பரேஷ் ராவல் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.