மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘எம்புரான் ‘ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குநருமான பிரித்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ எம்புரான் ‘ எனும் திரைப்படத்தில் மோகன்லால், பிரித்விராஜ் சுகுமாறன், மஞ்சு வாரியர், டொவினோ தோமஸ், இந்திரஜித் சுகுமாறன், சுராஜ் வெஞ்ரமூடு, சானியா ஐயப்பன், சாய்குமார் , பசுபதி, பாபி சிம்ஹா, சைன் டேம் சாக்கோ, அர்ஜுன் தாஸ், ஷஃரப் உதீன், ஜான் விஜய் , மனோஜ் கே. ஜெயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தீபக் தேவ் இசையமைத்திருக்கிறார். எக்சன் திரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆசீர்வாத் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முழுமையாக நிறைவடைந்தது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது.
இதனை அடுத்து இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே மோகன்லால் – பிரித்விராஜ் கூட்டணியில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற ‘லூசிஃபர் ‘எனும் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இது என்பதும், இந்த பாகம் வெளியானதும் மூன்றாம் பாகம் தொடங்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.