பொலிஸ் தலைமையகத்தின் முறைப்பாட்டுப் பிரிவுக்கு நேற்று (17) வரையில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பிலான 6 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஆரச்சிகட்டு, கம்பஹா, அம்பாறை, மொரகஹஹேன மற்றும் வெலிகேபொல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வெலிகேபொல பிரதேசத்தில் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பேச்சாளர், ஏனைய முறைப்பாடுகள் பெனர் கிழித்தல், போலி ஒப்பம் இட்டு வேட்பாளர் பட்டியல் தயாரித்தல் என்பன தொடர்பில் காணப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.
டிசம்பர் 15 ஆம் திகதி முதல் இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளதாகவும், கடந்த 16 ஆம் திகதி வரை எந்தவொரு முறைப்பாடும் பதிவாகியிருக்க வில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.