நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகளை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளமையால் சமகால அரசாங்கம் குழப்பம் அடைந்துள்ளது.
இதன் காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவதில் தாயக்கம் காட்டி வருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்முறை வட்டார அடிப்படையிலான வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையங்களிலேயே இம்முறை வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்றது.
பெரும்பாலான வட்டாரங்களின் வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
எனினும் இதுவரை தேர்தல் ஆணைக்குழுவினால் எந்தவொரு முடிவுகளும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.