அரச தலைவரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டில் சர்வாதிகாரத்தை உருவாக்கவும் இரண்டாவது முறையாக அரச தலைவராகவும் அற்ப ஆசையிலேயே நாட்டில் இவ்வாறான நெருக்கடி நிலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்தியுள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்கான மக்களின் நீதிக் குரல்’ என்ற போராட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் ஏற்பாட்டில் கண்டி நகரில் நேற்று நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:
உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் சிறி லங்கா சுதந்திர கட்சிக்கு ஏற்பட்ட இழப்பைச் சரிசெய்வதற்காகத் சதித் திட்டத்தால் முழு நாட்டையும் தற்போது பிரச்சி னைக்கு உள்ளாக்கியுள்ளார். ஆனால் நாங்கள் சதித் திட்டங்களுக்கு துணைபோகப் போவதில்லை– என்றார்.