தசரா திருவிழா மைசூருவில் கோலாகலமாக நடப்பது வழக்கம். ஆனால் தசராவின் இறுதி நாளில் மைசூரு அரச குடும்பத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மைசூரு அரச குடும்பத்தினர் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடி மகிழ்வது வழக்கம். ஆனால் இந்தாண்டு தசரா பண்டிகையின் கடைசி நாள் அந்த குடும்பத்திற்கு பேரடியாக குடுமத்தின் ராஜமாதாவின் தாய் புட்டா சிக்மணி (98) தசராவின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை காலையில் வயது முதிர்ச்சி காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த செய்தி அரச குடும்பத்திற்கு அதிர்ச்சியை கொடுத்த நிலையில், முந்தைய அரசர் ஸ்ரீகாந்ததத்தா வடியாரின் சகோதரியும், இளவரசியுமான விஷாலாட்சி தேவி (55) வெள்ளிக்கிழமை மாலை பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
தசரா பண்டிகை காரணமாக, இறந்தவர்களின் இறுதிச் சடங்கு வரும் 22ம் தேதி நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.