அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பைசர் கொவிட்-19 தடுப்பூசிகளின் மேலும் 60,000 டோஸ்கள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.
இந்த தடுப்பூசி அளவுகள் முதலில் அமெரிக்காவிலிருந்து கட்டாருக்கும், பின்னர் டோஹாவிலிருந்து இன்று அதிகாலை 2.15 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
405 கிலோகிராம் எடையுள்ள இந்த தடுப்பூசி அளவுகள் 12 பெட்டிகளில் அடைக்கப்பட்ட நிலையில் எடுத்து வரப்பட்டுள்ளது.
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் சிறப்பு லொறிகளுடன் உதவியுடன் தடுப்பூசி அளவுகள் விமான நிலையத்தில் இருந்து கொழும்பில் உள்ள மத்திய கிடங்கு வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது இலங்கை கொள்வனவு செய்த பைசர் தடுப்பூசி அளவுகளில் இரண்டாவது ஆகும்.
முன்னதாக கடந்த 05 ஆம் திகதி பைசர் தடுப்பூசிகளின் 26,000 டோஸ்கள் நாட்டை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.