ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மேலும் நான்கு புதிய இராஜங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில்,
சுரேன் ராகவன் – உயர் கல்வி இராஜாங்க அமைச்சு
வியாழேந்திரன் – இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை
சிவநேசத்துறை சந்திரகாந்தன் – கிராமப்புற வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
மொஹமட் முஷாரப் – புடவை மற்றும் உள்ளூர் ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சு
ஆகியோர் புதிய இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டள்ள நிலையில், தற்போது வரை 28 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.