கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 241 நபர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.
அதனால் இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்த நோயாளர்களது மொத்த எண்ணிக்கை 576,781 ஆக உயர்வடைந்துள்ளது.
நாட்டில் நேற்றைய தினம் 891 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், பதிவுசெய்யப்பட்ட மொத்த நோயாளர்களது தொகையும் 603,654 ஆக அதிகரித்தது.
தற்சமயம் நாடு ழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 11,543 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை கொவிட்-19 தொற்று தொடர்பாக இலங்கையில் 15,330 உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]