நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் புதிய சுகாதார விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய புதிய ஒழுங்கு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய நாடளாவிய ரீதியில் இரவு 11.00 மணி தொடக்கம் அதிகாலை 04.00 மணி வரை அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடு திங்கட்கிழமை இரவுடன் நீக்கப்பட்டுள்ளது.
திருமண வைபவங்களின் போது மண்டபங்களின் கொள்ளளவில் மூன்றில் ஒரு பகுதியினர் அல்லது அதிகபட்சமாக 100 பேர் கலந்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திறந்தவெளி திருமண நிகழ்வுகளில் 150 பேர் வரை கலந்துகொள்ள முடியும்.
எவ்வாறாயினும், திருமண நிகழ்வுகளில் மதுபானம் பயன்படுத்துவதற்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று குறித்த புதிய வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]