அரசை கடுமையாகச் விமர்சிக்கும் மேலும் இரு இராஜாங்க அமைச்சர்களையும் பதவி நீக்குவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது ஆராய்ந்து வருகின்றார் என்று அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
அவர்களைப் பதவி நீக்குவதன் மூலம் ஏற்படும் அரசியல் பின்னடைவு நிலை பற்றியும் இதன்போது ஜனாதிபதியால் கவனம் செலுத்தப்படுகின்றது. விரைவில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது.
அதன்போது இராஜாங்க அமைச்சுப் பதவிகளிலும் மாற்றம் வரவுள்ளது. அவ்வேளையில் இவ்விருவரும் நீக்கப்படலாம் எனத் தெரியவருகின்றது.
இதேவேளை, கல்வி இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த இன்று நீக்கப்பட்டார். அவர் வகித்த பதவி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]