மேற்கிந்திய தீவுகளுக்கு பறக்கிறது இந்திய அணி
இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது,
அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கும்பளே மற்றும் விராட் கோஹ்லி தலைமயிலான இந்திய அணி இன்று மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் மேற்க்கிந்திய தீவு செல்கின்றது.
அங்கு முதலில் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் ஆடுகிறது, அதற்கான முதல் போட்டி வருகின்ற 9-ம் திகதி நடைபெறுகிறது.
மேலும் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் ஆடும் முதல் போட்டி யூலை 21-ம் திகதி ஆன்டிகுவாவிலும், இரண்டாவது போட்டி 30-ம் திகதி ஜமைக்காவிலும், மூன்றாவது போட்டி ஆகஸ்ட் 9-ம் திகதி லூசியாவிலும்,நான்காவது போட்டி 18-ம் திகதி டிரினிடட் லும் நடைபெறுகிறது.
இந்திய அணி 2011-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் மேற்கிந்திய தீவு செல்கிறது. 2011 ஆம் ஆண்டு டோனி தலைமையிலான இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, தொடரை(1-0) என்ற கணக்கில் கைப்பற்றியது.
தற்போது, புதிய தலைமை பயிற்சியாளர் கும்பளே மற்றும் கோஹ்லி தலைமயிலான இந்திய அணி எவ்வாறு விளையாட உள்ளது என்ற எதிர் பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்
விராட் கோஹ்லி (அணித்தலைவர்), ரகானே (துணை தலைவர்), தவான், முரளி விஜய், புஜாரா, ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, விர்த்திமான் சகா, ஸ்டுவர்ட் பின்னி, அஸ்வின், அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ராகுல், ஷர்துல் தாக்கூர்.