மெனிடோபாவில் மன ஆரோக்கிய கல்வி திட்டத்திற்கு நிதி திரட்டும் வகையில் போட்டி நிகழ்வு!
மன ஆரோக்கிய கல்வி திட்டத்திற்காக நிதி திரட்டும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மணல் சிற்பங்களை உருவாக்கும் போட்டி நிகழ்வொன்று மெனிடோபா கிராண்ட் பீச்சில் இடம்பெற்றிருந்தது. இதில் பல ஆர்வலர்கள் கலந்துக் கொண்டு மணல் சிற்பங்களை தயாரித்து இருந்தனர்.
கடந்த ஈராண்டுகளுக்கு முன்னர் மன ஆரோக்கியம் குறைந்த நபரொருவர் தன்னை தானே சுட்டு உயிரிழந்திருந்தார். அவரின் நினைவாகவே குறித்த விழிப்புணர்வு போட்டி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ‘நான் இதற்கு முன்னர் மணல் சிற்பம் தயாரித்ததில்லை. இந்த நல்ல திட்டத்தில் பங்குதாரராக கலந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் முதன்முறையாக இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், குறித்த போட்டி நிகழ்வில் பெரியோர் முதல் சிறியோர் வரை குடுபத்துடன் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது