மெக்ஸிகோவில் வானுக்கும், பூமிக்கும் விஸ்வரூபம் எடுத்த சுழற்காற்று பார்ப்பவர்களை பெரிதும் அச்சுறுத்தியது.
ஸகாடகஸ் ((Zacatecas)) மாநிலத்தில் உள்ள ஃப்ரஸ்னிலோ ((Fresnillo)) என்ற இடத்தில் கடந்த சில நாட்களாகவே காற்று அதிகபட்ச வேகத்தில் வீசி வந்தது. இந்நிலையில் நேற்று திடீரென புழுதிப் புயலும், சுழற்காற்றும் அதிவேகமாக வீசத் தொடங்கியது. அப்போது சுழற்காற்றின் வேகத்தில் தூசு மண்டலம் ஒன்றிணைந்து வானுக்கும், பூமிக்குமாய் விஸ்வரூபம் எடுத்து மணிக்கு 112 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றிச் சுழன்றது.
சிவப்பு மற்றும் அரக்கு நிறத்தில் நின்றாடிய சுழற்காற்றைக் கண்டு அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.