பனி படர்ந்த நீர்ப்பரப்பில் 3000 கிலோமீட்டர் பயணத்திற்குப் பிறகு, ஒரு துணிச்சலான அண்டார்டிக் பென்குயின் தற்செயலாக இந்த வாரம் நியூஸிலாந்தை சென்றடைந்துள்ளது.
அண்டார்டிகாவின் கடற்கரையை பூர்வீகமாகக் கொண்ட இளம் வயது அடேலி பென்குயின், புதன்கிழமை இரவு நியூஸிலாந்தின் கேன்டர்பரியின் பேர்ட்லிங்ஸ் பிளாட் கடற்கரையில் தரையிறங்கியது.
அடேலி பென்குயின் நியூஸிலாந்து கடற்கரைக்கு வந்ததற்கான ஆவணப்படுத்தப்பட்ட இரண்டு நிகழ்வுகள் மாத்திரமே இதுவரை பதிவுசெய்யப்பட்டிருந்தன.
அதன்படி 1962 டிசம்பர் இல் மார்ல்பரோவில் உள்ள Flaxbourne ஆற்றின் வாயில் வடக்கே ஒரு வயதுடைய அடேலி பென்குயின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 1993 ஜனவரி இல் கைகோராவில் உயிருடன் ஒரு அடேலி பென்குயின் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்சமயம் இந்த தொலைதூர பயணத்தை மேற்கொண்டு நியூஸிலாந்தை வந்தடைந்த அடேலி பென்குயினின் காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.
இந்த பென்குயினை முதலில் அடையாளம் கண்ட உள்ளூர் ஹாரி சிங், முதலில் நான் அதை ஒரு மென்மையான பொம்மை என்று நினைத்தேன், திடீரென்று பென்குயின் தலையை நகர்த்தியது, அதனால் அது உண்மை என்பதை உணர்ந்தேன்” என்று கூறியுள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]