மூவரின் DNA மூலம் உலகில் பிறந்த முதல் குழந்தையை சந்தியுங்கள்.
விஞ்ஞானிகள் மூவரின் DNA-க்களை பயன்படுத்தி புதிய தொழில் நுட்பத்தை உபயோகித்து குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தாயிடமிருந்து ஒரு தீவிர மரபணு நோயை தடுப்பதே இம்முயற்சியின் இலக்காகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே இரு குழந்தைகளை இழந்துள்ளார்.
ஜோர்டானை சேர்ந்த பெற்றோர்களிற்கு ஐந்து மாதங்களிற்கு முன்னர் இக்குழந்தை பிறந்துள்ளது.மெக்சிக்கோவில் இவர்கள் பராமரிக்கப்பட்டுள்ளனர்.ஆனால் குழந்தை எங்கு பிறந்ததென தெரியாது.
நியு யோர்க்கில் உள்ள New Hope Fertility Center என்ற கருவுற்றல் மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
நோய் ஏற்படுத்தும் டிஎன்ஏக்களை தவிர்த்து தாயின் கரு முட்டையில் இருந்து சில ஆரோக்கியமான டிஎன்ஏகளை எடுத்து கொடையாளியின் முட்டைக்குள் செலுத்தப்பட்டுள்ளது. இரு பெற்றோர்களின் டிஎன்ஏ மற்றும் கொடையாளின் முட்டையுடன் சேர்ந்து குழந்தை மரபுரிமை பெற்றது.