புற்றுநோயால் தாக்கப்பட்டு மூளைக்கு பரவும் கட்டிகளை அழிக்கும் அதிநவீன கருவியொன்றினை சனிபுறூக் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.
Gamma Knife Icon எனப்படும் குறித்த கருவியினால், குறைந்த டோஸ் கதிர் வீச்சை மூளையில் இருக்கும் கட்டிகளை மட்டும் துல்லியமாக அகற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வகை உலகிலேயே மிகவும் துல்லியமான மூளை கதிர்வீச்சாகும் என சனிபுறூக் மருத்துவமனையின் கதிர் வீச்சு புற்றுநோய் துறையின் துணை தலைவர் மருத்துவர் அர்ஜூன் ஷாகல் தெரிவித்துள்ளார்.
முக்கியமாக ஒரு மில்லி மீற்றர்களிற்கும் குறைந்த அளவு துல்லியமான குவிய கதிர்வீச்சு வழங்கலாம் என கூறப்படுகின்றது.
இச்சிகிச்சை மூலம் முழு மூனை கதிர் வீச்சும் தடுக்கப்படலாம் எனவும், மண்டைக்குள் துளைத்தலும் தேவைப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது.