உலகளாவிய ரீதியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில், மூளையைத் தாக்கும் மர்ம நோய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மர்ம நோயால் இதுவரை 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இந்த மர்ம நோய்க்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
தூக்கமின்மை, நினைவுத்திறன் குறைதல், பிரமை உள்ளிட்டவை இந்த நோய்க்கான அறிகுறிகளாக காணப்படுகின்றது.
இந்த நோய்க்கான காரணம் தெரியாததால் அந்நாட்டு மருத்துவர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.