கொவிட் வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. நாட்டை முடக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரது நிலைப்பாடாக உள்ளது. நாட்டு மக்களை பாதுகாக்க ஜனாதிபதி சிறந்த தீர்வை எடுக்க வேண்டும்.
மூன்று வார காலத்திற்கு நாட்டை முடக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். பொருளாதரத்திற்காக சுகாதாரத்தை பலியிட முடியாது. என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன தெரிவித்தார்
இலங்கை மஹஜன கட்சியின் காரியாலயத்தில் நேற் று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.