நாடு எதிர்கொள்ளும் கடுமையான தொற்று நோய் சூழலில் தற்போதைய பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படக் கூடாது என விசேட வைத்தியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறைந்த பட்சம் இன்னும் மூன்று வாரங்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது, நாட்டில் முடக்க நிலை கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டினை பொது மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும் பொறுப்பற்ற வகையில் செயற்படுவதாகவும் அந்த சங்கத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
நோய் பரவுவதைத் தடுப்பது, தீவிர நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்தல், இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைத்தல் மற்றும் பொருளாதாரத்தை உயர்த்துவது போன்ற இலக்குகளை இத்தகைய தளர்வான பயணக் கட்டுப்பாடுகள் மூலம் ஒருபோதும் அடைய முடியாது எனவும் வலியுறுத்தியுள்ளனர்.