மூன்று மஞ்சள் கருக்களை கொண்ட அதிசய கோழி முட்டை
17 வயதான மேகன் வொட்கின்ஸ் எனும் இந்த யுவதி, தனது மூத்த சகோதரி எமிக்கு சொந்தமான உணவு விடுதியொன்றில் காலை உணவு தயாரிப்பதற்காக இந்த முட்டையை உடைத்தார்.
இதன்போது மூன்று மஞ்சள் கருக்களை அவர் கண்டார். மேகன் வொட்கின்ஸ் தந்தை சார்ளி கையும் அப்போது அந்த உணவு விடுதியில் இருந்தார். இது தொடர்பாக சார்ளி கை கூறுகையில், “சமையலுக்காக உடைத்த முட்டையில் 3 மஞ்சள் கருக்கள் இருப்பதாக மேகன் கூறினார்.
ஆனால், அப்பாத்திரத்தை அசைக்க வேண்டாம் எனவும் அந்த முட்டையை சமைப்பதை நிறுத்துமாறும் கூறினேன்.
முட்டையில் 3 மஞ்சகள் கருக்கள் இருப்பது அனைவருக்கும் சற்று திகைப்பை ஏற்படுத்தியது” எனக் கூறியுள்ளார்.
இக்குடும்பத்தினருக்குச் சொந்தமான கோழிப்பண்ணை ஒன்றிலிருந்து இம்முட்டை பெறப்பட்டிருந்தது. சுமார் 50 கோழிகள் அங்கு உள்ளதாகவும் அவை அண்மையிலேயே முட்டையிட ஆரம்பித்ததாகவும் சார்ளி கை தெரிவித்துள்ளார்.
கோழி முட்டைகளில் இரு மஞ்சள் கருக்கள் இருப்பதற்கான வாய்ப்பு ஆயிரத்துக்கு ஒன்று எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், 3 மஞ்சள் கருக்களுக்கான வாய்ப்பு 2.5 கோடிக்கு ஒன்று என நிபுணர்கள் கூறுகின்றனர்.