மூன்று நண்பர்கள் உச்சி மகாநாட்டில் கலந்து கொள்ள கனடா வரும் மெக்சிக்கோ அதிபர்.
ஒட்டாவா- மெக்சிக்கோ அதிபர் கனடா வருகை தருகின்றார்.கவனமாக வட அமெரிக்க தலைவர்களினால் வடிவமைக்கப்பட்ட மூன்று நாட்கள் உச்சி மகாநாட்டிற்காக வந்துள்ளார்.
என்றிக் பினா நீட்டோ பிரதம மந்திரியுடன் ரொறொன்ரோவில் இராப்போசன விருந்தில் கலந்து கொள்ள முன்பாக கியுபெக் நகர் செல்கின்றார்.பின்னர் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை நாட்டின் தலைநகரிற்கு செவ்வாய்கிழமை மேற்கொள்கின்றார்.
தொடர்ந்து மெக்சிக்கோ அதிபர் பிரதமர் ட்ரூடோ மற்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆகியோருடன் புதன்கிழமை ஒட்டாவாவில் இடம்பெறும் வடஅமெரிக்க அதிபர்கள் உச்சி மகாநாட்டில் கலந்து கொள்வார்.
கடந்த வருடத்தய முத்தரப்பு உச்சி மகாநாடு Keystone XL oil pipeline,குறித்து கனடா-யு.எஸ். நாடுகளிற்கிடையில் ஏற்பட்ட விவாதம் மற்றும் விசா தேவைகள் குறித்து கனடா மெக்சிக்கோவுடன் இடம்பெற்றுவரும் போராட்டம் காரணமாகவும் ரத்துச்செய்யப்பட்டது.
புதன்கிழமை பிற்பகல் மெக்சிக்கோ அதிபர் புறப்பட்ட பின்னர் ஒபாமா கனடிய கீழ் சபையில் உரையாற்றுவார்.21-வருடங்களின் பின்னர் முதல் பாராளுமன்றத்தில் இணைந்து உரையாற்றும் முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆவார் என கூறப்படுகின்றது.