கடும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக பொருளாதாரத்தையும் அரசையும் சிரமங்களுடன் முன்னெடுத்துச் சென்றோம் என்று தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
குருணாகல் நிக்கவரெட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தெரிவித்ததாவது:-
முன்னாள் அரச தலைவர் போர் முடிந்த பின்னர், நாட்டை முன்னேற்றி,வேலை வாய்ப்புப் பிரச்சினையை தீர்ப்பேன் என்று கூறினார். அவர் பிரச்சினைக ளைத் தீர்க்கவில்லை. இருந்த பிரச்சினைகள் மேலும் உக்கிரமடைந்தன. பெரு மளவில் கடனைப் பெற்றனர். கடனைத் திரும்பச் செலுத்த நாட்டின் வருமானம் போதுமானதாக இருக்கவில்லை.
கடும் பொருளாதாரப் பிரச்சினைக்கு மத்தியில் நாங்கள் அரசைப் பொறுப்பேற்ற போது, எங்களால் அரசை முன்னெ டுத்துச் செல்ல முடியாது என மகிந்த ராஜபக்ச எண்ணினார். ஒரு வருடத்தில் பொருளாதார வீழ்ச்சியடைந்து, அரசு கவிழும், அவர் ஆட்சியைப் பிடிக்கலாம் எனக் கருதினார். தற்போது நாடு பொருளாதார ஸ்திரத்தன்மையில் உள்ளது.- –என்றார்.