தற்போதைய சர்வதேச சூழ்நிலையில் மூன்றாம் உலக நாடுகள் மோசமாக பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் அவசியம் என பதில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க சர்வதேச மாநாடு ஒன்றில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்
இலங்கையில் ஆறுமில்லியன் மக்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது,வேறு அறிக்கைகள் இலங்கையில் 7.5மில்லியன் மக்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கின்றன.
இலங்கையின் நெல் உற்பத்தி சராசரியாக 24 மில்லியன் மெட்ரிக் தொன்,எனினும் 2021 இல் உற்பத்தி 16 மில்லியன் மெட்ரிக் தொன்னாக குறைந்துள்ளது.
இதன்காரணமாக இலங்கை தனது அரிசி தேவையின் மூன்றில் ஒன்றை இறக்குமதி செய்யவேண்டிய நிலையில் உள்ளது அந்நியசெலாவணி நெருக்கடிகள் இதனை செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளன.
இலங்கை எரிபொருள் விநியோக நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ளது. உலகவங்கி அங்கம் வகிக்கும் ஜி7 உணவு பாதுகாப்பு தொடர்பான சர்வதேச அமைப்பு 14 பில்லியன் டொலர்களை உணவு கொள்வனவிற்கு வழங்கியுள்ளது நாங்கள் அவர்களிற்கு நன்றியுடையவர்களாக உள்ளோம்.
இலங்கையில் நாங்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு நாங்களும் சர்வதேச நிலையும் காரணம், உக்ரைன யுத்தமும் ஐரோப்பிய ஒன்றிய தடைகளும் எங்களிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் தடைகள்எங்களை பாதிக்காது என தெரிவிக்கின்றது ஆனால் எங்களை போன்ற மூன்றாம் உலக நாடுகளை மோசமாக பலவீனப்படுத்தும்.
ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தை மாத்திரம் குற்றம்சாட்டமுடியாது ரஸ்யா யுத்தநிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்,ரஸ்யாவும் உக்ரைனும் யுத்தநிறுத்தத்திற்கு இணங்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.