சாய்ந்தமருதில் நேற்று மாலை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அங்கு வருகைத்தரவிருப்பதாகக் கூறி பலர் கறுப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதில் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்த அந்த பிரதேசத்தில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சாய்ந்தமருதிலிருந்து மு.கா அடங்கிய ஜ.தே.க.வில் கல்முனை மாகரசபைக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலரின் வீடுகள் சேதத்திற்குள்ளானதாக கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதன்போது, முன்னாள் பிரதிமேயர் பிர்தௌசின் வீட்டுக்கும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.