
தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது:
ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் சங்கிலியை உடைத்தாலே கொரோனா பரவலை தடுத்திட முடியும்.
தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.

மளிகை பொருட்களையும் நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்துள்ளது.
முழு ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கொரோனா 2வது அலை தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பிற்கும், நிதிநிலைக்கும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனாவை வெல்வோம்; நமக்கான வளம் மிகுந்த தமிழ்நாட்டை அமைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.