இலங்கை மின்சார சபை தொழிற்சங்கம் நாளைய தினம் ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளது.
இந்த ஆர்பாட்டம் நாளைய தினம் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலுவைக் கொடுப்பனவுகள் மற்றும் வரப்பிரசாத கொடுப்பனவுகள் என்பன இரத்து செய்யப்பட்டுள்ளதை எதிர்த்தே இந்த போராட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் ரஞ்ஜித் ஜயலால் இதனை தெரிவித்தார்.
இந்த ஆர்பாட்டத்தில் நாடாளாவிய ரீதியில் கடமையாற்றும் மின்சார சபை ஊழியர்கள் பங்கேற்கவுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தங்களது கோரிக்கைக்கு உரிய பதில் வழங்காத பட்சத்தில் நாடாளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.