முல்லைத்தீவிலுள்ள விவசாயிகளின் 12 ஏக்கர் காணி இதுவரை விடுவிக்கப்படாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து விவசாயிகள் முறையிட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (19.04.2023) கொடுக்கப்பட்டுள்ள இந்த முறைப்பாட்டில், முல்லைத்தீவு – ஊடையார் கட்டு தெற்கு கிராமத்தில் குளத்தின் கீழ்ப் பகுதியில் உள்ள 12 ஏக்கர் காணி நான்கு விவசாயிகளுக்குச் சொந்தமானது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், மீள்குடியேற்றத்தின் பின்னர் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் விவசாய பண்ணையாகச் செய்கை பண்ணப்பட்டு வருகின்றது. காணி உரிமையாளர்கள் பல தடவைகள் முறையிட்டும் ஆளுநர், மனித உரிமை ஆணைக்குழு மாவட்டச் செயலாளர் ஆகியோருக்கு முறையிட்டும் காணி விடுவிக்கச் சொல்லியும் இதுவரை காணி விடுவிக்கப்படவில்லை.
காணி ஆவணங்கள்
இந்த நிலையில், விவசாயிகளின் காணியினை விடுவிக்கக் கூறி கடந்த 17.04.2023 அன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்னால் வள்ளிபுனம் புதுக்குடியிருப்பில் உள்ள சிவில் பாதுகாப்பு திணைக்கள கட்டளைத்தளபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், காணி உரிமை கோருபவர்களுக்கு உடனடியாக கையளிப்பு செய்து காணியில் குறித்த நபர்கள் பயிர்செய்கையில் ஈடுபட ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
1976ஆம் ஆண்டு குறித்த காணியினை செய்கை பண்ணி வந்துள்ள காணி ஆவணங்கள் போர்க்காலத்தில் இல்லாத நிலையில் இருந்த ஆவணங்கள் பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். மனித உரிமை ஆணைக்குழுவும் காணியினை உரிமையாளரிடம் வழங்கச் சொல்லியுள்ளார் என்று காணியின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்.
இராணுவம் சட்டவிரோதம்
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குரல்பதிவில்,
2019ஆம் ஆண்டு தொடக்கம் காணி உரிமையாளர்களுக்கு விடுவிக்கப்படவேண்டும் என்று அனைத்து தரப்பினாலும் அறிவிக்கப்பட்டும் காணி உரிமையாளர்களுக்குச் செந்த காணியினை வழங்காமல் அரசு இராணுவ பிரிவிற்காகத் தோட்டம் செய்யப்படுகின்றது.
வனவளம் பிடித்து வைத்திருக்கும் மக்களின் காணியினை இராணுவம் சட்டவிரோதமாகப் பிடித்து தோட்டம் செய்துகொண்டிருக்கின்றது.
கால அவகாசம்
இந்தக் காணியை மக்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று கூறியிருந்தும் வனவளம் இராணுவத்தினருடன் இணைந்து கற்களை நாட்டு மக்களுக்குக் காணியினை கொடுப்பதனை தடுப்பதற்கான செயற்பாடு நடந்து கொண்டிருக்கின்றது.
எங்களைப் பொறுத்தமட்டில் இந்த காணி விடுவிக்கவேண்டும். இதற்கான கால அவகாசத்தினை கொடுக்கின்றோம். அவர்கள் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில், காணியினை முழுமையினை மக்களுக்கு எடுத்துக்கொடுப்பதற்கான பொறுப்பை ஏற்று மக்களுடன் சேர்ந்து செயற்படுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.