முல்லைத்தீவு நகரில் இராணுவ மயம்!
முல்லைத்தீவு நகரில் இன்று அதிகளவான இராணுவத்தினர் நிராயுதபாணியாக நடமாடியுள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
வர்த்தக நிலையங்கள், வங்கிகள், தபால் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தமது தேவைகளை பூர்த்திசெய்யும் நோக்கில் இராணுவத்தினர் நடமாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், வங்கிகளில் பணம் பெற்றுக்கொள்வதற்கு வரிசையில் நின்றதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஒரு பொதுநபருக்கு இரண்டு இராணுவத்தினர் என்னும் வீதத்தில் இராணுவத்தினரின் நடமாட்டங்கள் இருந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.