மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், வர்த்தக வளாகத்தின் மேல்தளத்தில் உள்ள உணவகத்தில், நடந்த தீ விபத்து வழக்கில் மேலும் இருவர் கைதாகினர்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், லோயர் பரேல் பகுதியில், ‘கமலா மில்ஸ்’ வளாகத்தில், நான்கடுக்கு வர்த்தக கட்டடம் உள்ளது.இந்த கட்டடத்தின் மேல் தளத்தில், ‘1 அபோவ்’ என்ற பெயரில், மதுபான விடுதி மற்றும் உணவகம் உள்ளது. இங்கு, கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இரவு, குஷ்பு என்ற பெண் ஒருவருக்கு பிறந்த நாள் விழாகொண்டாட்டத்தின் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் , 11 பெண்கள் உட்பட, 14 பேர்உயிரிழந்தனர். பிறந்த நாள் கொண்டாடிய பெண்ணும் உயிரிழந்தார்.தீயால் ஏற்பட்ட புகையால்மூச்சுத் திணறி இறந்ததாக, டாக்டர்கள் தெரிவித்தனர். சம்பவம் நடந்த சில நிமிடங்களில் கட்டடத்தின் உரிமையாளர்கள் தப்பியோடினர்.
போலீசார் வழக்ப்பகு பதிவு செய்து பலரை கைது செய்துள்ள நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் தீ விபத்து நடந்த கட்டடத்தின் உரிமையாளர்கள் ஜிகர் சங்க்வி, கிர்பேஷ் சங்க்வி ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் விசாரணைநடக்கிறது.